|
| ஒரிஸ்ஸா : கண்டதும் சுட உத்தரவு |
| புவனேஸ்வர் (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008 ( 13:58 IST ) | |
ஒரிஸ்ஸா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி ஏராளமானோர் வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காந்தமால் மாவட்டம் ஜலேஸ்பேட்டா என்ற இடத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மர்ம கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் வி.எச்.பி.யினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால்,கலவரம் வெடித்தது.
காந்தமால் மாவட்டத்தில் மட்டுமின்றி ஒரிசா முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.
காந்தமால் மாவட்டத்தில் பலிகுடா, பர்காமா, திஹாபலி,உதயகிரி உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற தேவாலயங்கள்,வழிபாட்டுக்கூடங்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன.தலைநகர் புவனேஸ்வரில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும்,அதையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டது.
காந்தமால் மாவட்டத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார்.மேலும் பல இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்றும் ஊரடங்கு உத்தரவை மீறி காந்தகால் மாவட்டத்தின் பல இடங்களில் வி.எச்.பி.யினர் தீவைப்பு உள்ளிட்ட வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் வன்முறைக் கும்பலை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை உயரதிகாரி சத்யபிரதா ஷாகு தெரிவித்தார்.
பலிகுடா மற்றும் உதயகிரி பகுதிகளுக்கிடையே உட்பட்ட பல இடங்களில் கையில் கம்பு மற்றும் கொடிய ஆயுதங்களை ஏந்தி அதிக எண்ணிக்கையிலான கலவரக் கும்பல் வன்முறையில் ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ராய்கியா என்ற இடத்தில், வன்முறைக் கும்பலுக்கு பயந்து ஏராளமான குடும்பங்கள் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|