யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
லஞ்சத்தை ஒழிப்பேன்: சிரஞ்சீவி உறுதி
திருப்பதி (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 12:21 IST )
புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் சிரஞ்சீவி, 'அரசியலில் லஞ்சத்தை ஒழிப்பேன்' என்று உறுதியளித்துள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி 'பிரஜா ராஜ்யம்' என்ற புதிய அரசியல் கட்சியை நேற்று திருப்பதியில் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

என்னுடைய 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கை நேற்றுடன் முடிந்து விட்டது. இன்றிலிருந்து நான் அரசியல் பிரவேசம் செய்கிறேன். இன்று அன்னை தெரசா பிறந்தநாள். அவருடைய சேவையைப்போல் என்னுடைய சேவையும் அரசியலில் தொடரும்.

நான் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன். விறகு வெட்டி பிழைப்பு நடத்துகிற அளவிற்கு வறுமையில் இருந்தவன். அரை வயிற்று கஞ்சி குடித்து பள்ளிக்கு சென்றவன். எனவே, ஏழையின் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.

ஏற்கனவே அரசியலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், கட்சியை தொடங்கும்போது, அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று சொல்லி செய்யாமல் போயிருக்கிறார்கள்.

இந்த கடவுள் சாட்சியோடு சொல்கிறேன், நான் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மக்கள் சந்தோஷமாக வாழ்வார்கள். அரசியலில் லஞ்சத்தை அடியோடு ஒழிப்பேன்.

அரசியல்வாதிகள் செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவேன். 24 மணி நேரமும் மக்களுக்காக சேவை செய்வேன். கல்வி, மருத்துவம், தொழிற்சாலைகள் போன்ற திட்டங்களை கொண்டுவந்து, ஆந்திர மாநிலத்தை தன்னிறைவு அடைய செய்வேன். மக்கள் குறை இல்லாமல் வாழவேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

விவசாயிகள், நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுடைய வாழ்க்கையையும் மேம்படுத்த பாடுபடுவேன். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவேன். மக்கள் சேவையில் முழு கவனம் செலுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்மு : ராணுவ முற்றுகையில் தீவிரவாதிகள் ; 4 பேர் பலி
ஜம்முவில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் ;3 பேர் பலி
'பிரஜா ராஜ்யம்': புதிய கட்சி தொடங்கினார் சிரஞ்சீவி
பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் :அம‌ர்நா‌த் சமிதி எச்சரிக்கை
வெள்ளத்தில் மிதக்கிறது பீகார்; 42 பேர் பலி
எல்லையில் துப்பாக்கிச் சூடு கவலைக்குரியது: ஏ.கே. அந்தோணி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...