யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்மு : ராணுவ முற்றுகையில் தீவிரவாதிகள் ; 4 பேர் பலி
ஜம்மு (ஏஜென்சி), புதன்கிழமை, 27 ஆகஸ்டு 2008   ( 12:17 IST )
ஜம்முவில் தீவிரவாதிகள் இன்று நடத்திய திடீர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 4 பேர் பலியாகியுள்நிலையில், ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்முவில் உள்ள மிஷ்ரிவாலா என்ற இடத்தில்,இன்று அதிகாலை 6 மணியளவில் ஆட்டோ ஒன்றில் வந்திறங்கிய போலீஸ் சீருடை அணிந்த 3 தீவிரவாதிகள்,அங்குள்ள ராணுவ சோதனைச் சாவடியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ஒரு ராணுவ வீரர் பலியானார்.இந்த தாக்குதலை நடத்திவிட்டு உடனடியாக அந்த தீவிரவாதிகள் அங்கிருந்து அருகிலுள்ள சின்னூர் என்ற இடத்திற்கு தப்பி சென்று அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கிக் கொண்டனர்.

அவ்வாறு தப்பி செல்லும்போதே ஆட்டோ டிரைவரையும், அவ்வழியாக சென்ற பால்காரர் ஒருவரையும் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், அவர்களை விரட்டி சென்ற ராணுவம் அந்த பகுதியை சுற்றி வளைத்தது.அதே நேரத்தில் தீவிரவாதிகள் தாங்கள் புகுந்த வீட்டிலுள்ள 8 பேரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும், இதில் 4 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராணுவத்திற்கும் வீட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், எஞ்சியுள்ள இரண்டு தீவிரவாதிகளையும் உயிருடன் பிடிக்கவோ அல்லது சுட்டுக் கொல்லவோ ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இருதரப்பினருக்குமிடையே கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும்,அந்த இடத்திற்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஜம்முவையொட்டியுள்ள எல்லைப் பகுதியான கனாசக் என்ற இடத்தில் எல்லைக்கு அப்பாலிலிருந்து மூன்று அல்லது நான்கு தீவிரவாதிகள் நேற்று அதிகாலை ஜம்முக்குள் ஊடுருவியதாகவும், அவர்கள் ஊடுருவ ஏதுவாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய படையினரின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்முவில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் ;3 பேர் பலி
'பிரஜா ராஜ்யம்': புதிய கட்சி தொடங்கினார் சிரஞ்சீவி
பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம் :அம‌ர்நா‌த் சமிதி எச்சரிக்கை
வெள்ளத்தில் மிதக்கிறது பீகார்; 42 பேர் பலி
எல்லையில் துப்பாக்கிச் சூடு கவலைக்குரியது: ஏ.கே. அந்தோணி
சிங்குர் விவகாரம்: மம்தா கோரிக்கையை நிராகரித்து மே.வ. அரசு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...