|
| ஜம்முவில் ஊரடங்கு தளர்வு |
| ஜம்மு(ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008 ( 12:47 IST ) | |
ஜம்முவில் இன்று காலை 5 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அமர்நாத் கோவில் நில விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் கலவரம் காரணமாக ஜம்மு பிராந்தியத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது.
கடந்த சில தினங்களாக சில மாவட்டங்களில் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டன.
இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் உள்ளது.நேற்று ஜம்முவின் பல்வேறு இடங்களிலும் போராட்டக்காரர்கள் தங்களது குழந்தைகளுடன் வீதியில் இறங்கி போராடப் போவதாக எச்சரித்திருந்தனர்.
இதனால் நேற்று ஊரடங்கை மிக கண்டிப்பாக அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில்,இன்று காலை 5 மணி முதல் 12 மணி நேரத்திற்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதற்காக மத்திய பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|