|
| மே.வங்கம்,கேரளா,திரிபுராவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 18:19 IST ) | |
இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய இடதுசாரி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை நீக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடர்தல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்திருந்தன.
இதில் ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசடியூ, யுடியுசி, டியூசிசி ஆகிய 7 இடதுசாரி தொழிற்சங்கள் பங்கேற்றன.
இந்த போரட்டம் காரணமாக நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. டெல்லி மற்றும் கோல்கத்தா விமான நிலையங்களில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகோரியும் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் இந்தத் தொழிற்சங்கங்கள் இன்று ரயில் மற்றும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால், அத்தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.
இந்நிலையில,இடதுசாரி கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை இன்று வெகுவாக பாதிக்கப்பட்டது.
கடைகள, வர்த்தக நிறுவனங்கள, அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.சாலைகளிலும் வாகனப் போக்குவரத்துக் காணப்படவில்லை.
அதேபோன்று வட கிழக்கு மாநிலங்களிலும் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.ஆனால் நாட்டின் இதர மாநிலங்களில் ரயில, வாகன மற்றும் விமான போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் காணப்படவில்லை.
வங்கிகளை இணைப்பது உள்ளிட்ட அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால், நாடு முழுவதும் வங்கி சேவையிலும் மிகுதியாக பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|