யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஒகேனக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றம் : கர்நாடகம்
பெங்களூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 16:47 IST )
ஒகேனக்கல் பிரச்சனை தொடர்பாக ர்நாடகம் உச்ச நீதிமன்றம் செல்ல இருப்பதாக அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர்,மேலும் கூறியதாவது :

ஒகேனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டம் தொடர்பாக கர்நாடகம் தெரிவிக்கும் ஆட்சேபணைகளுக்கு பதிலளிக்காமல் தமிழக அரசு அந்த திட்டத்தை நிறைவேற்றக் கூடாது.

ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அமைப்பில் அனைத்து அரசியல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டால், கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை.

கூட்டு சர்வே மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டத்திலிருந்து தண்ணீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான விளக்கம் போன்ற நிலுவையில் உள்ள அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தமிழக அரசுக்கு நாங்கள் ஒரு வார கால அவகாசம் தருகிறோம்.

இந்த பிரச்சனையில் தமிழகம் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை எனில் கர்நாடக அரசு, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு ஒன்றை அமைத்து பிரதமரை சந்திப்பதற்காக அடுத்த மாதம் டெல்லிக்கு அனுப்பும்.

கூட்டு சர்வே மேற்கொள்ளாதவரை ஒகேனக்கல் கூட்டுக் குடி நீர் திட்டத்தை தமிழகம் நிறைவேற்றக் கூடாது என்பதுதான் எங்களது தெளிவான நிலையாகும்.இது விஷயத்தில் மத்திய அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மீண்டும் கலவரம் : ஜம்முவில் ஊரடங்கு
காஷ்மீர் ஆளுனருடன் நாராயணன் சந்திப்பு
அகமதாபாத் குண்டுவெடிப்பு : மேலும் இருவர் கைது
ராஜீவ் 64வது பிறந்தநாள்: தலைவர்கள் அஞ்சலி!
கம்யூ. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் ; விமான போக்குவரத்து பாதிப்பு
நாடு முழுவதும் பயிற்சி முகாம் நடத்திய 'சிமி'!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...