|
| கம்யூ. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் ; விமான போக்குவரத்து பாதிப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 11:21 IST ) | |
பல்வேறு தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டங்களால், நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதித்துள்ளது.
டெல்லி மற்றும் கோல்கத்தா விமான நிலையங்களில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், விமானப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் விமானப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகோரியும் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, வங்கிகளை இணைப்பது உள்ளிட்ட அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால், நாடு முழுவதும் வங்கி சேவையிலும் மிகுதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை நீக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடர்தல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதில் ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசடியூ, யுடியுசி, டியூசிசி ஆகிய 7 இடதுசாரி தொழிற்சங்கள் பங்கேற்றுள்ளன.
இந்தத் தொழிற்சங்கங்கள் இன்று ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளன.
இடதுசாரி கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை இன்று வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|