|
| நாடு முழுவதும் பயிற்சி முகாம் நடத்திய 'சிமி'! |
| அகமதாபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008 ( 16:41 IST ) | |
கேரளா மற்றும் குஜராத் மாநிலங்கள் மட்டுமல்லாது மேலும் பல மாநிலங்களிலும் தடை செய்யப்பட்ட 'சிமி' இயக்கம் பயிற்சி முகாம்களை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை 26 ம் தேதியன்று அகமதாபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 'சிமி' இயக்கத்திற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 'சிமி' இயக்கத்தைச் சேர்ந்த தவுஃபீக் பிலால் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேரளா, குஜராத் தவிர நாடு முழுவதும் குறிப்பாக மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள கண்ட்வா மாவட்டம, கர்நாடகா மாநிலத்திலுள்ள தார்வடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 'சிமி'இயக்கம் பயிற்சி முகாம் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு துப்பாக்கிச் சுடுதல, பாறை ஏறுதல் மற்றும் வரைபடத்தில் இடங்களை கண்டறிதல் ஆகிய பயிற்சி அளிக்கப்பட்டதாக பிலால் மேலும் தெரிவித்துள்ளார்.
கம்ப்யூட்டர் வித்தகரான பிலாலின் உண்மையான பெயர் அப்துல் சுப்கான்.இவருக்கு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், பல்வேறு வழக்குகளுக்காக இவர் தேடப்பட்டு வந்ததாகவும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெர்வித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|