|
| காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008 ( 14:16 IST ) | |
காஷீமீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
அமர்நாத் கோவில் நில விவகாரம் தொடர்பாக ஜம்முவில் இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம்,காஷ்மீர் பள்ளத்தாக்கில் அத்தியாவசிய பொருட்கள் வருவதை தடுத்ததாக கூறியும, இப்பிரச்சனையில் மத்திய அரசைக் கண்டித்தும் காஷ்மீரிலுள்ள பிரிவினைவாத அமைப்புகள் நடத்திய போராட்டத்தினால், கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரடைந்து அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவை காஷ்மீருக்குள் வரத்துவங்கின.இதனையடுத்து தங்களது போராட்டத்தை 3 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக பிரிவினைவாத அமைப்புகள் நேற்று அறிவித்திருந்தன.அதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்வேறு சமூக அமைப்புகள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆகியோரும் போராட்டத்தை நிறுத்த முடிவு செய்திருந்தன.
இதனையடுத்து காஷ்மீரில் இன்று ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியது.பள்ளிகள, கல்லூரிகள, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் , அலுவலகங்கள் திறந்திருந்தன.
சாலைகளில் வாகன போக்குவரத்தையும் காண முடிந்தது.அதே சமயம் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வாகனங்களிலும், வர்த்தக நிறுவனங்களின் கட்டடங்களிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
இதனிடையே ஜம்மு பிராந்தியத்தில் ஜம்மு, சம்பா, உதாம்பூர் மற்றும் கிஸ்த்வார் ஆகிய மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|