|
| காஷ்மீரில் 10 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றல் |
| ஜம்மு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008 ( 12:52 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் மறைவிடம் ஒன்றிலிருந்து 10 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
ரஜோரி மாவட்டம் புதார் தாலுகாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கோட்ரங்கா என்ற இடத்தில் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த 10 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் தங்களது தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே ரம்பான் மாவட்டத்திலுள்ள ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கையெறி குண்டுகளுடன் நஷீர் அகமத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,பாதுகாப்பு படையினர் மீது வீசுவதற்காக வெடிகுண்டுகளுடன் நின்றிருந்ததாக தெரிய வந்தது.அவரிடம் தொடர்ந்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|