யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நாடு முழுவதும் இடதுசாரிகள் நாளை வேலை நிறுத்தம்
புதுடெல்லி / சென்னை (ஏஜென்சி), 19 ஆகஸ்டு 2008   ( 10:55 IST )
இடதுசாரி கட்சிகள் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போரட்டம் காரணமாக பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்து.

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளை எதிர்த்தும், பொருளாதார ஏற்றாத் தாழ்வை சரி செய்யாதது, தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தாதது, தொழிலாளர் சட்டங்களை ஒட்டுமொத்தமாக மீறுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்தத் தவறியது, தொழிலாளர் விரோதப் போக்கு அதிகரிப்பது ஆகியவற்றைக் கண்டித்தும் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள இடதுசாரிகள் மற்றும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த போராட்டத்தில் ஏஐடியூசி, சிஐடியூ, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, ஏஐசிசடியூ, யுடியுசி, டியூசிசி ஆகிய 7 இடதுசாரி தொழிற்சங்கள் பங்கேற்கின்றன.

இந்த வேலைநிறுத்தத்தில் 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளதாக இந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. பேரணிகள், முற்றுகைப் போராட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்டவை நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனிடயே தமிழகத்திலும் இந்த போராட்டம் முழு அளவில் நடைபெறும் என தமிழக இடதுசாரி தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து 70 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்களான செளந்தரராஜன், தியாகராஜன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தம் காரணமாக ஆட்டோக்கள், பஸ்கள், லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சென்னையில் 80 ஆயிரம் ஆட்டோக்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆக. 25 ல் பெரும்பான்மை நிரூபிக்க மதுகோடாவுக்கு உத்தரவு
ரங்கராஜன், கிருஷ்ணா ராஜ்யசபை எம்.பி.யானார்!
ஜ‌ம்முவில் அமை‌தியை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர்
சிபுசோரன் ஆதரவு வாபஸ்: மதுகோடா அரசு கவுழும்?
குண்டுவெடிப்பு: 'சிமி' தீவிரவாதிகளுக்கு 14 நாள் காவல்
அரசியலில் குதித்தார் நடிகர் சிரஞ்சீவி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...