யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஆக. 25 ல் பெரும்பான்மை நிரூபிக்க மதுகோடாவுக்கு உத்தரவு
ராஞ்சி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008   ( 10:42 IST )
ஜார்க்கண்ட் அரசுக்கு அளித்த வந்த தரவை சிபுசோரன் கட்சி விலக்கிக் கொண்டதால் முதல்வர் துகோடா தலைமையிலான அரசு வருகிற 25 ம் தேதிக்குள் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில ஆளுனர் செய்யத் ராஸி, கோடாவுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், வருகிற 25 ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கூறியுள்ளதாக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, சிபுசோரன் சார்பில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி வேண்டும் என்று பேரம் பேசப்பட்டது.

இதற்கு காங்கிரசும் ஒப்புகொண்டது. இதன் பின்னர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு தப்பி பிழைத்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து, ஒரு மாதமாகிவிட்ட நிலையில் சிபுசோரனின் முதல்வர் பதவிக்கான கோரிக்கையை கண்டுகொள்ளாமல் காங்கிரஸ் மவுனம் சாதித்தது.

இதனால், மதுகோடா முதல்வர் பதவியிலில்ருந்து விலகி, தான் முதல்வராக பொறுப்பேற்க வழிவகுக்க வேண்டும் என்று சிபு சோரன் கோரிக்கை விடுத்தார். ஆனால், மதுகோடா பதவி விலகவில்லை.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் எம்.பிக்கள் மற்றும் 17 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இதில் மதுகோடா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

பின்னர், கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆளுநர் ரஸியை சந்தித்த சிபு சோரன், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான கடிதத்தை அளித்தார்.

இதன் மூலம், மதுகோடா தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரங்கராஜன், கிருஷ்ணா ராஜ்யசபை எம்.பி.யானார்!
ஜ‌ம்முவில் அமை‌தியை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர்
சிபுசோரன் ஆதரவு வாபஸ்: மதுகோடா அரசு கவுழும்?
குண்டுவெடிப்பு: 'சிமி' தீவிரவாதிகளுக்கு 14 நாள் காவல்
அரசியலில் குதித்தார் நடிகர் சிரஞ்சீவி!
ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்புகிறது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...