யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ரங்கராஜன், கிருஷ்ணா ராஜ்யசபை எம்.பி.யானார்!
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவருமான சி.ரங்கராஜன், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக இருந்த ரங்கராஜன் கடந்தவாரம் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

மகாராஷ்டிர மாநில ஆளுராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆளுனர் பதவியைவிட்டு விலகினார்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பதற்காக அவர் தேர்தல் களமிறங்கினார். எனினும், தேர்தலில் வெற்றிப்பெற்று பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது.

இதனால் மாநிலங்களவை உறுப்பினராக கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரங்கராஜன், எஸ்.எம். கிருஷ்ணா இருவரும் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றனர்.

மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சி.ரங்கராஜனையும் சேர்த்து, தற்போது மூன்று ரிசர்வ் வங்கி கவர்னர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர்.

அஸ்ஸாமில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும், ரிசர்வ் வங்கி கவர்னராக பணியாற்றியவர்.

இதேபோன்று ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த பிமல் ஜலானும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜ‌ம்முவில் அமை‌தியை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர்
சிபுசோரன் ஆதரவு வாபஸ்: மதுகோடா அரசு கவுழும்?
குண்டுவெடிப்பு: 'சிமி' தீவிரவாதிகளுக்கு 14 நாள் காவல்
அரசியலில் குதித்தார் நடிகர் சிரஞ்சீவி!
ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்புகிறது
கவர்னரை சந்திக்கிறார் சோரன் : கோடா அரசு கவிழ்கிறது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...