|
| ஜம்முவில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 ஆகஸ்டு 2008 ( 15:54 IST ) | |
'ஜம்மு-காஷ்மீரில் அமைதியையும், இயல்பு நிலையையும் கொண்டுவர அனைவரும் முயற்சிக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொருளாதார வல்லுநர் சி. ரங்கராஜன், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு- காஷ்மீரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, அமைதியை ஏற்படுத்த அரசியல் கட்சிகள் மற்றும் நேர்மையாக சிந்திக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சிக்க வேண்டும்.
அங்கு தற்போது நிலைமை கட்டுப்படுத்துவது நம் அனைவரின் கடமை. இது பிரிவினைப் பிரச்சனை அல்ல என்பதைப் புரிந்துகொண்டு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரிவினைவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் சோனாவர் என்ற இடத்தில் உள்ள ஐ.நா. அலுவலகம் நோக்கி இன்று பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர்.
இதை கருத்தில் கொண்டே பிரதமர் மன்மோகன் சிங் இந்த கோரிக்கையை விடுத்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|