யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சிபுசோரன் ஆதரவு வாபஸ்: மதுகோடா அரசு கவிழும்?
ஜார்க்கண்ட் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை சிபுசோரன் விலக்கிக் கொண்டதால் முதல்வர் மதுகோடா தலைமையிலான அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, சிபுசோரன் சார்பில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி வேண்டும் என்று பேரம் பேசப்பட்டது.

இதற்கு காங்கிரசும் ஒப்புகொண்டது. இதன் பின்னர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பிக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதன் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு தப்பி பிழைத்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து, ஒரு மாதமாகிவிட்ட நிலையில் சிபுசோரனின் முதல்வர் பதவிக்கான கோரிக்கையை கண்டுகொள்ளாமல் காங்கிரஸ் மவுனம் சாதித்தது.

இதனால், மதுகோடா முதல்வர் பதவியிலில்ருந்து விலகி, தான் முதல்வராக பொறுப்பேற்க வழிவகுக்க வேண்டும் என்று சிபு சோரன் கோரிக்கை விடுத்தார். ஆனால், மதுகோடா பதவி விலகவில்லை.

ந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் எம்.பிக்கள் மற்றும் 17 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். இதில் மதுகோடா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

பின்னர், கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆளுநர் ரஸியை சந்தித்த சிபு சோரன், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதற்கான கடிதத்தை அளித்தார்.

இதுதவிர, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த துணை முதல்வர் சுதிர் மஹாதோ மற்றும் 2 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்தனர்.

இதன் மூலம், மதுகோடா தலைமையிலான அரசு தற்போது பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில், சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கும் முயற்சியில் சிபுசோரன் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாடு முழுவதும் பயிற்சி முகாம் நடத்திய 'சிமி'!
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது
காஷ்மீரில் 10 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றல்
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு ; மேலும் ஒருவர் கைது
நாடு முழுவதும் இடதுசாரிகள் நாளை வேலை நிறுத்தம்
ஆக. 25 ல் பெரும்பான்மை நிரூபிக்க மதுகோடாவுக்கு உத்தரவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...