யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அரசியலில் குதித்தார் நடிகர் சிரஞ்சீவி!
ஐதராபாத் (ஏஜென்சி), 18 ஆகஸ்டு 2008   ( 09:18 IST )
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி அரசியலில் குதித்தார். வரும் 26ம் தேதி கட்சியின் பெயர் மற்றும் கொடியை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் சிரஞ்சீவி. இவர் அரசியலில் குதிக்கபோவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன.

இந்நிலையில் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை சிரஞ்சீவி நேற்று வெளியிட்டார். ஐதராபாத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

அரசியலில் தற்போது ஓர் வெற்றிடம் உள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன்.

வரும் 26ம் தேதி திருப்பதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தின் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவிப்பேன்.

பொதுமக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் இறங்கியுள்ளேன். முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரே நான் அரசியலுக்கு வருவதற்கு உந்துதலாக இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய கட்சி அறிவிப்பை சிரஞ்சீவி நேற்று வெளியிட்டதை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அரசியல் கட்சிகள் கலக்கம்:

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ஹரிராம ஜோகையா, சிரஞ்சீவி கட்சியில் சேருவதற்காக நேற்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு அனுப்பியுள்ளார்.

இதுதவிர, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர், எம்பி மற்றும் எம்எல்ஏக்களும் தங்களது கட்சியிலிருந்து விலகி, வரும் 26ம் தேதி நடைபெறும் பொதுகூட்டத்தில் சிரஞ்சீவி கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன.

வாழ்க்கை குறிப்பு:

நடிகர் சிரஞ்சீவி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், முகல்தரு என்ற கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 1955ல் பிறந்தார். சிரஞ்சீவியின் இயற்பெயர் கொனிதெல்லா சிவ சங்கர வரபிரசாத்.

கல்லூரி படிப்பு முடித்ததும் கடந்த 1977ல் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி படிப்படியாக முன்னேறினார். வெகுவிரைவிலேயே முன்னணி கதாநாயகன் ஆகி, சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் பெற்றார். பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிப்புக்காக மாநில அரசின் விருதான "நந்தி' உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம பூஷண் விருதும் பெற்றுள்ளார்.

தற்போது அரசியலில் குதித்துள்ளதன் மூலம், இனி நடிப்பதை குறைத்துக் கொள்ளவுள்ளதாகவும், அரசியலில் தீவிர கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்புகிறது
கவர்னரை சந்திக்கிறார் சோரன் : கோடா அரசு கவிழ்கிறது
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்
குஜராத் குண்டுவெடிப்பு : முக்கிய குற்றவாளி உட்பட 10 பேர் கைது
அ‌ஸ்ஸா‌மி‌ல் இன்றும் கு‌ண்டு வெடி‌ப்பு
ஜம்முவில் ஹ‌ி‌ஸ்பு‌ல் ‌‌தீ‌விரவா‌திக‌ள் 2 பேர் சு‌ட்டு‌க்கொலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...