யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்புகிறது
ஸ்ரீநகர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்டு 2008   ( 16:15 IST )
அமர்நாத் கோவில் நில விவகாரத்தால் நடந்த போராட்டம் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்புகிறது.

ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராணுவ பாதுகாப்புடன் சரக்குகளை ஏற்றி செல்லும் லாரிகளின் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு லாரிகள் ஜம்முவில் இருந்து லாரிகள் காஷ்மீருக்குள் செல்லத் துவங்கியுள்ளன.

இன்று காலையிலிருந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதாக தகவல் ஏதும் இல்லை என அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கலவரத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பிரிவினைவாத குழுக்கள் அழைப்பு விடுத்திருந்ததால், காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மிகவும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்க ஏதுவாக சிறிய கடைகள் மட்டும் ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்தன.

இதனிடையே போராட்டத்தை தொடருவதா இல்லையா என்பது குறித்து முடிவு செய்வதற்காக ஹூரியத் மாநாட்டு கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டியும், இதர பிரிவினைவாத குழுக்களும், வியாபாரிகளும் இன்று மாலை கூடி முடிவெடுக்க உள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுனர் வோரா, இன்று உயர்மட்ட அளவிலான கூட்டத்தைக் கூட்டி விவாதிக்த்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கவர்னரை சந்திக்கிறார் சோரன் : கோடா அரசு கவிழ்கிறது
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்
குஜராத் குண்டுவெடிப்பு : முக்கிய குற்றவாளி உட்பட 10 பேர் கைது
அ‌ஸ்ஸா‌மி‌ல் இன்றும் கு‌ண்டு வெடி‌ப்பு
ஜம்முவில் ஹ‌ி‌ஸ்பு‌ல் ‌‌தீ‌விரவா‌திக‌ள் 2 பேர் சு‌ட்டு‌க்கொலை
அகமதாபாத் குண்டுவெடிப்பு : முக்கிய குற்றவாளி உட்பட 8 பேர் கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...