யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கவர்னரை சந்திக்கிறார் சோரன் : கோடா அரசு கவிழ்கிறது
ராஞ்சி(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்டு 2008   ( 15:09 IST )
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடா தலைமையிலான ரசுக்கு அளித்து வரும் தரவை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ள சிபுசோரன், இது தொடர்பாக ஆளுனரை இன்று மாலை சந்திக்க உள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது கடந்த ஜூலை 22 ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.

இதற்கு கைமாறாக மத்திய அமைச்சர் பதவியை கோரினார் அக்கட்சியின் தலைவர் சிபுசோரன்.

இது விஷயத்தில் காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளாமல் இருந்ததால், திடீரென ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை தனக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனையடுத்து தற்போது ஜார்க்கண்ட் முதல்வராக உள்ள மது கோடாவை பதவி விலகுமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது. ஆனால் மதுகோடா பதவி விலக மறுத்து விட்டார்.

இதனால் கோடா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள சிபு சோரன், ஆளுனரை இன்று இரவு 7 மணிக்கு சந்திக்க உள்ளார்.

அப்போது கோடா அரசுக்கு அளித்து வரும் தமது கட்சியின் ஆதரவை சோரன் வாபஸ் பெறலாம் என தெரிகிறது.இதனால் கோடா அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தனது அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மது கோடா கூறியுள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும், கட்சி மேலிடம் எனக்கு இதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, விலகச் சொல்லி யாரும் என்னை கேட்கவில்லை என்றார்.

82 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் மது கோடா தலைமையிலான அரசுக்கு 43 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர்.

இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 17 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் 7, ராஷ்டீரிய ஜனதாதளம் 9, யுஜிடிபி 2, தேசியவாத காங்கிரஸ் 1 மற்றும் சில சுயேச்சைகள் அடங்குவர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்
குஜராத் குண்டுவெடிப்பு : முக்கிய குற்றவாளி உட்பட 10 பேர் கைது
அ‌ஸ்ஸா‌மி‌ல் இன்றும் கு‌ண்டு வெடி‌ப்பு
ஜம்முவில் ஹ‌ி‌ஸ்பு‌ல் ‌‌தீ‌விரவா‌திக‌ள் 2 பேர் சு‌ட்டு‌க்கொலை
அகமதாபாத் குண்டுவெடிப்பு : முக்கிய குற்றவாளி உட்பட 8 பேர் கைது
ஜம்மு - காஷ்மீர் நிலைமை குறித்து பிரதமர் ஆலோசனை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...