|
| குண்டுவெடிப்பு: 3 தீவிரவாத இயக்கங்கள் மீது சந்தேகம் |
| பெங்களூர்(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 18:55 IST ) | |
பெங்களூரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு லஷ்கர் - இ - தொய்பா, சிமி அல்லது வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பு காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு சந்தேகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பெங்களூரிலும், கர்நாடகத்தின் பிற பகுதிகளிலும் லஷ்கர் - இ - தொய்பா மற்றும் சிமி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல வங்கதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஹூஜி எனப்படும் ஹர்கத் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
எனவே இதற்குப் பழி வாங்கும் வகையில் இன்றைய குண்டுவெடிப்புக்கு மேற்கூறிய 3 அமைப்புகளைச் சேர்ந்த ஒரு இயக்கம் காரணமாக இருக்கலாம் என மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|