|
| பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பு |
| பெங்களூரு (ஏஜென்சி), 25 ஜூலை 2008 ( 15:02 IST ) | |
பெங்களூரில் இன்று மதியம் அடுத்தடுத்து பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
மதியம் 1.45 மணியளவில் ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா சோதனைச்சாவடி அருகே உள்ள போரம் மால் என்ற இடத்தில் முதல் குண்டு வெடித்தது. அதற்கடுத்து இரண்டாவதாக மைசூர் ரோட்டில் ரோட்டில் உள்ள நாயந்தஹள்ளி மற்றும் சிவாஜி நகர் ஆகிய இடங்களிலும் வெடித்தது.
அடுத்து கோரமங்களா-ஆடுகோடி பகுதியிலும், பின்னர் லாங்போர்ட்டவுன் உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து குண்டுகள் வெடித்தன.
சுமார் 15 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இந்த குண்டுகள் வெடித்துள்ளனன.இதில் ஒரு பெண் பலியானதாகவும், 20 பேர் வரை படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு சில இடங்கள் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்தவையாகும்
குண்டுவெடிப்பை தொடர்ந்து தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.குண்டுவெடிப்பு குறித்த தகவல் பரவியதால் நகர் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் வெடிக்கப்பட்ட குண்டுகள் குறைந்த சக்தி கொண்டவை என்றும், அவை எத்தகைய வகையை சேர்ந்தது என்பது குறித்தும், குண்டு வைத்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
லஷ்கர் -இ - தொய்பா தீவிரவாதிகள் இந்த குண்டு வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிக்கப்பட்ட இடங்களுக்கு வெடி குண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.வெடி குண்டு நிபுணர்களும் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர்.
நகர் முழுவதும் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பெங்களூரின் எல்லைப் பகுதிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள செயின்ட் ஜான்ஸ் மற்றும் மல்லையா மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை நேரில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஷங்கர் பிடாரி பார்வையிட்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கக்கூடிய டைமர் கருவி இணைக்கப்பட்டு இக்குண்டு வெடிக்கப்பட்டுள்ளதாகவும், சேதம் அதிகம் ஏற்பட வேண்டும் நோக்கத்தில் இரும்பு போல்டுகளும் இணைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த குண்டுவெடிப்பு ஒவ்வொன்றும் அரை கையெறி குண்டு அளவுக்கு மட்டுமே வீரியம் மிக்கவை என்றும், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் உருளைகளை பயன்படுத்தி இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு இடம் பிரபல டென்னிஸ் வீரர் மகேஸ் பூபதி இல்லத்தின் அருகே என்றும், இதில் அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மும்பை, டெல்லி, சென்னை ஆகிய பெருநகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|