|
| ஜம்முவில் ஊரடங்கு விலக்கல் |
| ஜம்மு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 13:57 IST ) | |
ஜம்மு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.
அமர்நாத் கோவில் நிலம் பிரச்சனை தொடர்பாக இந்து அமைப்புகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, ஜம்மு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்த இந்த போராட்டம் மற்றும் பதற்றம் காரணமாக நேற்று ஜம்மு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பதற்றம் ஓரளவு தணிந்து அமைதி காணப்படுவதால் ஊரடங்கு உத்தரவு இன்று விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அதே சமயம் நிலைமை மீண்டும் மோசமானால் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்படும் என ஜம்மு துணை போலீஸ் கமிஷனர் மந்தீப் பண்டாரி தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|