யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
இடதுசாரிகள் மீது கசப்புணர்வு இல்லை : பிரணாப்
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 13:25 IST )
ஐ.மு.கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டதற்காக இடதுசாரிகள் மீது கசப்புணர்வு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், அதே சமயம் நடந்து முடிந்த நிகழ்வுகள் தமக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.

கடந்த 4 ஆண்டு காலமாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் ஒன்றாக செயல்பட்டோம்.

எங்களுக்கிடையே கடுமையான விரோத உணர்வு ஏதுமில்லை, இன்னும் வெளிப்படையாக கூறவேண்டுமானால் இடதுசாரி தலைவர்கள் மீது எனக்கு கசப்புணர்வு ஏதுமில்லை.அதேபோன்று இடதுசாரி தலைவர்களும் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கிப் பேசவில்லை.

அடுத்த தேர்தலுக்கு பின்னர் இடதுசாரிகளுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படுமா என்று கேட்கப்படுகிறது.அது குறித்து இப்போதே எப்படி என்னால் கூறமுடியும் ? சூழ்நிலைகள் எப்படி ஏற்படுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.வாய்ப்புகளை திறந்தும் வைக்கவில்லை; மூடவும் இல்லை என அந்த பேட்டியில் பிரணாப் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சோம்நாத்துக்கு வயது 80: தலைவர்கள் வாழ்த்து!
'அணுச‌க்‌தி ஒப்பந்தம்: கால‌க்கெடு ‌நி‌ர்ண‌யி‌க்க முடியாது!'
பிரதிபா பாட்டீல் - மன்மோகன் சந்திப்பு
அணுசக்தி: மன்மோகன்-புஷ் தொலைபேசியில் பேச்சு
சேது‌: மா‌ற்று‌ப் பாதைக்கு தயாராகிறது மத்திய அரசு
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...