யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சோம்நாத்துக்கு வயது 80: தலைவர்கள் வாழ்த்து!
புதுடெல்லி (ஏஜென்சி), 25 ஜூலை 2008   ( 12:42 IST )
மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் 80வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு இன்று 80வது பிறந்தநாள். இதையொட்டி, பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை சோம்நாத் இல்லத்துக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருக்கு பூங்கொத்து கொடுத்து நேரில் வாழ்த்து தெரிவித்தார். குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் தங்களது அலுவலக அதிகாரிகள் மூலம் சோம்நாத் சாட்டர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்தும், மலர்க்கொத்தும் கொடுத்து அனுப்பினர்.

இதேபோல் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சோம்நாத் சாட்டர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, இன்று காலையிலிருந்தே அவரது இல்லத்தில் முக்கியப் பிரமுகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

'இழப்பு சோம்நாத்துக்கு அல்ல!'

அசாம் மாநிலம் தெஸ்பூர் பகுதியில் கடந்த 1929ம் ஆண்டு பிறந்தவர் சோம்நாத் சாட்டர்ஜி.

கோல்க‌த்தாவில் சட்டம் பயின்ற இவர் பிரிட்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலை பட்டமும் பெற்றார்.

'பாரிஸ்டர்' பட்டம் பெற்ற மிகத்திறமையான வழக்கறிஞரான இவர் கடந்த 1968ம் ண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து 40 ஆண்டுகளாக கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

கட்சியில் சேர்ந்த 3 ஆண்டுக்கு பின்னர் தனது சொந்தத் தொகுதியான போல்பூரில் இருந்து முதன் முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக 10 முறை தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர்களுக்காக போராடும் தீவிர போராளியான இவர், மேற்கு வங்க மாநில தொழிற் வளர்ச்சிக் கழகத்துக்கு தலைமையேற்ற பிறகே, அங்கு ஏராளமான தொழிற் சங்கங்கள் உருவாக ஆரம்பித்தன.

வாதத்திறமையும், நேர்மையும் ஒருங்கே பெற்ற இவர், எதையும் புள்ளி விபரங்களுடன் பேசி ஆளுங்கட்சியினரை அதிரவைப்பவர். தனது சொந்த செலவினங்களை அரசு ஏற்பதை வெறுப்பவர்.

எந்த நெருக்கடி வந்தாலும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்.

இதற்கு ஒரு சிறிய உதாரணம் தான், 40 ஆண்டு காலம் தான் பணியாற்றிய கட்சித் தலைமையே வலியுறுத்தியும், 'அரசியல் வேறு; சபாநாயகர் பதவி வேறு' என்ற கொள்கையில் உறுதியாக நின்று, பதவி விலக மறுத்து.

இதன் காரணமாகவே, இரு தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

"கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சித் தலைமை கொடுத்த பிறந்தநாள் பரிசு இது" என்று சிலர் சோம்நாத் சாட்டர்ஜியை விமர்சிக்கின்றனர்.

ஆனால், "நேர்மையும், திறமையும் வாய்ந்த ஒரு தலைவரை நீக்கியதால் இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தானே தவிர, சோம்நாத் சாட்டர்ஜிக்கு அல்ல" என்பதே பெரும்பாலானோரின் கருத்து.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இடதுசாரிகள் மீது கசப்புணர்வு இல்லை : பிரணாப்
'அணுச‌க்‌தி ஒப்பந்தம்: கால‌க்கெடு ‌நி‌ர்ண‌யி‌க்க முடியாது!'
பிரதிபா பாட்டீல் - மன்மோகன் சந்திப்பு
அணுசக்தி: மன்மோகன்-புஷ் தொலைபேசியில் பேச்சு
சேது‌: மா‌ற்று‌ப் பாதைக்கு தயாராகிறது மத்திய அரசு
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...