யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அணுசக்தி: மன்மோகன்-புஷ் தொலைபேசியில் பேச்சு
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 09:33 IST )
ணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ், பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றிப் பெற்றது, அணுசக்தி ஒப்பந்தத்தை தடங்கல் இன்றி நிறைவேற்ற வழி வகுத்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, கடந்த இரு வாரங்களாக டெல்லி அரசியலில் ஏற்பட்டு வந்த அதிரடி திருப்பங்களை அமெரிக்காவும் உன்னிப்பாக கவனித்து வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தப்பியதால் அமெரிக்காவும் மகிழ்ச்சியடைந்தது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் புஷ், பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்ததை மிக விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்றும், குறிப்பாக தனது பதவிக் காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் புஷ் விருப்பம் தெரிவித்ததார்.

இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாக பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியளித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, இந்தியா-அமெரிக்கா இடையேயான கூட்டு பொருளாதார நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவது, ராணுவ உறவை பலப்படுத்துவது, உலக வர்த்தக அமைப்பில் வர்த்தகம் தொடர்பான முட்டுக்கட்டைகளை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சேது‌: மா‌ற்று‌ப் பாதைக்கு தயாராகிறது மத்திய அரசு
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
பண பேரம் : பா.ஜ. எம்.பி.க்கள் முறைப்படி புகார்
சோம்நாத் நீக்கம் : காரத் கருத்து
அமர்நாத் பிரச்சனை : ஜம்முவில் ஊரடங்கு
ஜம்மு எல்லையில் இரவு நேர ஊரடங்கு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...