யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சேது‌: மா‌ற்று‌ப் பாதைக்கு தயாராகிறது மத்திய அரசு
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 18:50 IST )
சேது சமு‌த்‌திர‌ ‌தி‌ட்ட‌த்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவது குறித்து ப‌ரி‌சீ‌லி‌த்து வருகிற 29 ‌ம் தே‌தி ப‌தி‌லளிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வேண்டும் மற்றும் ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி இந்து அமைப்புகள், பா.ஜனதா, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'ராம சேது' என்ற ஒரு பாலமே இல்லை என்பதால் அதனை அரசு இடிக்கவில்லை என்று கூறியிருந்தது.

அப்போது நடைபெற்ற வாதத்தின்போது குறுக்கிட்ட தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன், ‌நீ‌திப‌திக‌ள் ஆ‌‌ர்.‌வி. ர‌வீ‌ந்‌திர‌ன், ஜெ.எ‌ம். பா‌ஞ்சா‌ல் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட முத‌ன்மை அம‌ர்வு, சேது சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை‌ச் செய‌ல்படு‌த்து‌கை‌யி‌ல், ந‌ம்‌பி‌க்கையை‌க்காய‌ப்படு‌த்தாமலு‌ம் சு‌ற்று‌ச்சூழலை‌ப் பா‌தி‌க்காமலு‌ம் இர‌ண்‌டி‌ற்கு‌ம் தகு‌ந்தா‌ற்போல நட‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று அர‌சி‌ற்கு ஆலோசனை வழ‌ங்‌கியது.

மேலு‌ம், "ரூ.2,500 கோடி ம‌தி‌ப்பு‌ள்ள சேது சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌‌ம் தொட‌ர்பாக ப‌ல்வேறு அரசுக‌ள் 19 வ‌ல்லுந‌ர் குழு‌க்களை அமை‌த்து‌ள்ளன. இ‌தி‌ல் 18 குழு‌க்க‌ள், மா‌ற்று‌ப்பாதை இரு‌ப்பதாக அ‌றி‌க்கை வழ‌ங்‌கியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், ஒரு குழு ம‌ட்டு‌மே ராம‌ர் பால‌த்தை இடி‌த்து செய‌ல்படு‌த்த‌க் கூடிய ஆறாவது வ‌ழி‌த்தட‌த்தை ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளது எ‌ன்பதை‌க் கவ‌னி‌க்க வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌ம் ‌நீ‌திபதிகள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் இ‌ன்றும் சேது சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌ம் தொட‌ர்பான வழ‌க்கு ‌விசாரணை‌க்கு வந்தது.

அப்போது ம‌த்‌திய அர‌சி‌ன் சா‌ர்‌பி‌ல் ஆஜரான வழ‌க்க‌‌றிஞ‌ர் பா‌லி எ‌ஸ். நா‌ரிமன், சேது சமு‌த்‌திர‌ ‌தி‌ட்ட‌த்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுமாறு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தெரிவித்த யோசனையை ம‌த்‌திய அரசு ‌தீ‌‌விரமாக‌ப் ப‌ரி‌சீ‌லி‌த்து வருவதாகவு‌ம், வருகிற 29 ‌ம் தே‌‌தி தனது ‌நிலையை அரசு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌க்கு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
பண பேரம் : பா.ஜ. எம்.பி.க்கள் முறைப்படி புகார்
சோம்நாத் நீக்கம் : காரத் கருத்து
அமர்நாத் பிரச்சனை : ஜம்முவில் ஊரடங்கு
ஜம்மு எல்லையில் இரவு நேர ஊரடங்கு!
சேது : மத்திய அரசு மனுவுக்கு பா.ஜ. ஆட்சேபம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...