|
| பண பேரம் : பா.ஜ. எம்.பி.க்கள் முறைப்படி புகார் |
| புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 16:26 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க சமாஜ்வாதி கட்சி தங்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டிய பா.ஜனதா எம்.பிக்கள் மூன்று பேரும், தங்களது புகாரை முறைப்படி அளிக்குமாறு மக்களவை செயலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் பணக்கட்டுக்களை காட்டி புகார் அளித்த பா.ஜனதா எம்.பி.க்கள் அசோக் அர்கால், மகாவீர் பகோரா மற்றும் ஃபகன் சிங் ஆகியோருக்கு முறைப்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நேரில் வந்து தங்களது புகாரை முறைப்படி அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பா.ஜனதா எம்.பிக்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மை என்றால், குற்றச்சாட்டுக்குள்ளான யாரும் தப்ப முடியாது என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|