|
| சோம்நாத் நீக்கம் : காரத் கருத்து |
| ஐதராபாத் (ஏஜென்சி), 24 ஜூலை 2008 ( 15:34 IST ) | |
சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியைவிட்டு நீக்குவதை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், கட்சி உத்தரவை ஏற்று சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்ய மறுத்ததால் அவருக்கு எதிராக இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது என்றார்.
அதே சமயம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது எங்களுக்கு துரதிருஷ்டவசமான ஒன்றாகத்தான் இருந்தது.அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்யவில்லை.
அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டவுடனேயே எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி. யாரும் சபாநாயகர் பதவியில் நீடிக்கக் கூடாது என கட்சியின் மத்தியக் கமிட்டி முடிவு செய்தது.அதனை சோம்நாத்திடம் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.
ஆனால் அவர் பதவி விலக வேண்டும் என்ற முடிவை அவர் ஏற்கவில்லை.எனவே எங்களுக்கும் நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.
இருப்பினும் தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் மத்திய கமிட்டியில் மேல்முறையீடு செய்யலாம்.அதற்கான பிரிவு கட்சி விதி முறைகளில் உள்ளத என காரத் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|