|
| அமர்நாத் பிரச்சனை : ஜம்முவில் ஊரடங்கு |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 14:13 IST ) | |
அமர்நாத் பிரச்சனையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ஏற்பட்ட பதட்டம் காரணமாக ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் கோவிலுக்கு நிலம் வழங்க பிறப்பித்த உத்தரவை அரசு ரத்து செய்ததை எதிர்த்து பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற குல்தீப் குமார் என்பவர் விஷம் அருந்தி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.இதனால் ஜம்மு முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், இந்து அமைப்புகள் இன்று ஜம்முவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இதனால் பதற்றம் மேலும் அதிகரித்ததையடுத்து, ஜம்முவில் உள்ள ஆர்.எஸ்.புரா, பைஷ்னா, விஜயபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் போலீஸாருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|