|
| ஜம்மு எல்லையில் இரவு நேர ஊரடங்கு! |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 13:01 IST ) | |
தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் ஆயுதக் கடத்தலை தடுக்க, இந்திய எல்லைப்பகுதியில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்தியப் பகுதியில் உள்ள கிராமங்கள் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் ஆயுதக் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச எல்லைக் கோட்டில் இருந்து இந்தியப் பகுதியான ஜம்மு மாவட்டத்தின் 1 கி.மீ தொலைவில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இன்றிலிருந்து, இரு மாதங்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்.
இந்த உத்தரவுப்படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை யாரும் தனியாகவோ அல்லது கும்பலாகவோ இந்த பகுதிக்குள் நடமாடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதியே இந்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஜம்மு மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|