|
| சேது : மத்திய அரசு மனுவுக்கு பா.ஜ. ஆட்சேபம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 12:46 IST ) | |
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு பா.ஜனதா கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ளது.
நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், 'ராம சேது' என்ற ஒரு பாலமே இல்லை என்பதால் அதனை அரசு இடிக்கவில்லை என்று கூறியிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த பதில் மனுவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள பா.ஜனதா கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுகவிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கு கைமாறாக அரசு இவ்வாறு பதில் மனு தாக்கல் செய்துள்ளது என்று கூறியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர் வி.கே. மல்ஹோத்ரா, அரசின் இந்த பதில் மனு லட்சக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகள் மீது விழுந்த மற்றொரு அடி என்று கூறினார்.
மேலும் இந்த பிரச்சனையில் மத்திய அரசை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்த தமது கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|