|
| முன்னாள் தீவிரவாதி குடும்பத்துடன் சுட்டுக்கொலை! |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 12:39 IST ) | |
ஜம்மு-காஷ்மீரில், திருந்தி வாழ்ந்த முன்னாள் தீவிரவாதியையும், அவரது குடும்பத்தினரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஹிஸ்புல் முகாஜிதீன் தீவிரவாத அமைப்பில் செயல்பட்டு வந்தவர் குலாம் ஹசன் வானி. இவர் கடந்த நவம்பரில் ராணுவத்திடம் சரணடைந்தார்.
பின்னர் மனம் திருந்தி, தனது மனைவி ஆஷிமா பேகம், மகள் ஆசிஃபா, மகன் ஆசிஃப் ஆகியோருடன் தோடா மாவட்டம் மர்மாத் பாடி கிராமத்தில் வசித்து வந்தார்.
இன்று அதிகாலை, குலாம் ஹசன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது, அவரது வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாத கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் குலாம் ஹசன், அவரது மனைவி, மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரது மகன் மருத்துவமனையில் உயிரிழந்தான்.
இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|