யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சோம்நாத் பதவியில் நீடிக்க மன்மோகன் கோரிக்கை
புதுடெல்லி (ஏஜென்சி), 24 ஜூலை 2008   ( 10:14 IST )
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சட்டர்ஜி, தொடந்து சபாநாயகர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதையடுத்து, சபாநாயகர் பதவியிலிருந்து விலகுமாறு சோம்நாத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்தியது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த சோம்நாத், நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னரே தமது பதவி விலகல் குறித்து முடிவு செய்வதாக அறிவித்திருந்தார்.

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னரும் அவர் பதவி விலகவில்லை. அதோடு, தாம் பதவி விலகப்போவதில்லை என்றும், தொடர்ந்து வற்புறுத்தினால் எம்.பி. பதவியையே ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் இடதுசாரி தலைவர்கள் சிலரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம், நேற்று அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

இந்நிலையில், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். அப்போது, சபாநாயகர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு மன்மோகன் கேட்டுக்கொண்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சோம்நாத் சட்டர்ஜியை சந்தித்து சபாநாயகர் பதவியில் நீடிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்கை பிடிப்புள்ள சோம்நாத் சாட்டர்ஜி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் மூத்தத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி.

'பாரிஸ்டர்' பட்டம் பெற்ற மிகத்திறமையான வழக்கறிஞர். மேற்கு வங்க மாநிலத்தில் தொழிற் வளர்ச்சிக் கழகத்துக்கு தலைமையேற்று பல்வேறு தொழிற்சங்கங்கள் உருவாக காரணமாக இருந்தவர். தொழிலாளர்களுக்காக போராடும் தீவிரமாதொழிற்சங்க போராளி இவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக 10 முறை தேர்ந்து எடுக்கப்பட்ட இவர், புள்ளி விவரங்களுக்குடன் பேச ஆரம்பித்தால் அவையில் அனல் பறக்கும்.

வாதத்திறமையும், நேர்மையும் ஒருங்கே பெற்ற இவர், கேள்விகள் கேட்க ஆரம்பித்தால் ஆளும் கட்சியினருக்கு 'கிலி' பிடிக்கும்.

சிறுவயதில் கால்பந்து வீரராக திகழ்ந்த இவர், நாடாளுமன்றத்தில் தனது வாதத்திறமையால் எதிரணியை வீழ்த்தி 'கோல்' அடிப்பார்.

மிகவும் பெருமைமிக்க சபாநாயகர் என்ற உயர் பொறுப்பில் இருந்தாலும், எவரிடமும் எளிமையாக பேசி, பழகும் குணமிக்கவர்.

தனது சொந்த செலவினங்களையோ, அரசு முறை பயணங்களின் போது தனது குடும்பத்தினரின் விமானச் செலவுகளையோ அரசு செலுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காதவர்.

எந்த நெருக்கடி வந்தாலும், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்று பெயர் பெற்ற சோம்நாத், கடந்த தேர்தலில் மேற்கு வங்க மாநிலம் போல்பூர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'அணுச‌க்‌தி ஒப்பந்தம்: கால‌க்கெடு ‌நி‌ர்ண‌யி‌க்க முடியாது!'
பிரதிபா பாட்டீல் - மன்மோகன் சந்திப்பு
அணுசக்தி: மன்மோகன்-புஷ் தொலைபேசியில் பேச்சு
சேது‌: மா‌ற்று‌ப் பாதைக்கு தயாராகிறது மத்திய அரசு
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
பண பேரம் : பா.ஜ. எம்.பி.க்கள் முறைப்படி புகார்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...