யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கட்சி மாறி ஓட்டு : 8 எம்.பி.க்கள் பா.ஜ.விலிருந்து நீக்கம்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ட்சிமாறி வாக்களித்த பா..ஜனதா எம்.பி.க்கள் 8 பேர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மன்மோகன் அரசு நேற்று மக்களவையில் நம்பிக்கை வாக்கு கோரியபோது பா.ஜனதா கட்சியை சேர்ந்த 4 பேர் கட்சி மாறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதுதவிர அக்கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் கட்சி மாறி வாக்களித்த மற்றும் ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளாத தமது கட்சி எம்.பி.க்கள் 8 பேரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள அத்வானியின் இல்லத்தில் நடந்த பா.ஜனதா தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அத்வானி, மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

நீக்கப்பட்ட 8 எம்.பி.க்களில் 4 பேர் கட்சி மாறி வாக்களித்ததற்காகவும், மற்ற நான்கு பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததற்காகவும் இந்த நடவடிக்கையை சந்தித்துள்ளதாக உடனிருந்த ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அத்வானி, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெற்ற வெற்றி கறைபடிந்த ஒன்று என்றும், இந்திய ஜனநாயகத்தில் ஜூலை 22 ம் தேதி ஒரு கறுப்பு தினமாக வரலாற்று புத்தகங்களில் இடம்பெறும் என்று கூறினார்.

கடந்த இரு தினங்களாக தமக்கு மிகவும் வேதனையான அனுபவம் ஏற்பட்டதாகவும், இந்த சம்பவம் ( கட்சி மாறி வாக்களித்தது ) தம்மை மிகவும் புண்படுத்திவிட்டதாகவும் அத்வானி கூறினார்.

( ஊழல் ) கறை படிந்த அமைச்சர்களை தமது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு ஆட்சியை துவக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்த கறை படிந்த வெற்றி மூலம் தனது ஆட்சியையும் கறைபடிந்த வெற்றியுடன் முடித்துக் கொண்டிருக்கிறது.

கட்சி மாறி வாக்கு மற்றும் ஒட்டெடுப்பில் கலந்து கொள்ளாமை போன்றவை இல்லாமல் இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற்றிருக்காது என அத்வானி மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கட்சியிலிருந்து சோம்நாத் சாட்டர்ஜி நீக்கம்
நாடு தழுவிய கண்டன பிரச்சாரம்: பிஎஸ்பி, 3வது அணி முடிவு
கட்சி மாறி வாக்களித்த எம்.பி.க்கள் நீக்கம் : பா.ஜ. முடிவு
பார்லி.யில் பணக்கட்டு: பா.ஜ.வுக்கு சமாஜ்வாதி நோட்டீஸ்
பதவி விலக மறுப்பு : சோம்நாத் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் ?
கட்சி மாறி ஒட்டுப்போட்ட பிஜு ஜனதா தள எம்.பி. நீக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...