|
| கட்சியிலிருந்து சோம்நாத் சாட்டர்ஜி நீக்கம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 18:05 IST ) | |
சபாநாயகர் பதவியிலிருந்து விலக மறுத்தையடுத்து சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியிலிருந்து , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று நீக்கியது.
அதே சமயம் சோம்நாத் அவரது கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், அவர் மக்களவை சபாநாயகர் பதவியில் நீடிப்பதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை.
அவர் மக்களவையால் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.எனவே கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டதற்கும், சபாநாயகராக அவர் நீடிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவராக ராஜினாமா செய்தாலோ அல்லது ஓட்டெடுப்பு மூலம் நீக்கப்பட்டாலோதான் அவர் அப்பதவியிலிருந்து விலக முடியும் என்று முன்னாள் அட்டார்னி ஜெனரல் சொலி சொரப்ஜி தெரிவித்தார்.
முன்னதாக மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதையடுத்து, சபாநாயகர் பதவியிலிருந்து விலகுமாறு சோம்நாத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்தியது.
ஆனால் அதனை ஏற்க மறுத்த சோம்நாத், நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னரே தமது பதவி விலகல் குறித்து முடிவு செய்வேன் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால், அதற்கு முன்னதாக அவைக்கு வரும் வழியில் செய்தியாளர்கள் அவரை வழி மறித்து, பதவி விலகுவது எப்போது ? என கேட்டார்கள்.
அதற்கு பதிலளித்த சோம்நாத், " எனது பதவி விலகலை அவைக்கு வெளியே அறிவிக்க மாட்டேன் " எனக் கூறினார்.
இதனால் நம்பிக்கை வாக்கு முடிவடைந்த பின்னர் அவர் தனது பதவி விலகல் குறித்து அவையில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று அவ்வாறு அறிவிப்பு எதையும் சோம்நாத் வெளியிடவில்லை.
இந்நிலையில், தாம் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று மேற்கு வங்க இடதுசாரி தலைவர் பிமன் போஸிடம் தொலைபேசி மூலம் சோம்நாத் உறுதியாக தெரிவித்து விட்டார்.
மேலும் இனியும் ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினால் தாம் தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என சோம்நாத் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
சோம்நாத்தின் இந்த உறுதியான நிலைப்பாடு காரணமாக அதிர்ச்சியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம், இது தொடர்பாக சோம்நாத் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்று கூறி ஆலோசித்தது.இந்நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|