யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நாடு தழுவிய கண்டன பிரச்சாரம்: பிஎஸ்பி, 3வது அணி முடிவு
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 16:27 IST )
மத்திய அரசை வீழ்த்தும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து நாடு தழுவிய அளவில் கண்டனப் பிரச்சாரம் மேற்கொள்ள பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் மற்றும் 3வது அணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் ஐமுகூ தலைமையிலான மத்திய அரசை தோற்கடிக்க இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் 3வது அணி எனப்படும் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி ஆகியவை தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தன.

எனினும், பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட 13 எம்பிக்கள் கட்சி மாறி வாக்களித்ததாலும், 8 எம்பிக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்ததாலும் மத்திய அரசு தப்பி பிழைத்து ஆட்சியை தக்கவைத்து கொண்டது.

இந்நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இல்லத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பரதன் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் பிஸ்வாஸ், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜார்கண்ட் விகாஸ் மோர்சா பாபுலால் மராண்டி ஆகிய 3வது அணி தலைவர்கள் ஆகியோர் இன்று கூடி ஆலோசித்தனர்.

அப்போது, அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு மற்றும் விவசாயிகள் அவலம் ஆகியவற்றை கண்டித்து நாடு தழுவிய அளவில் கண்டனப் பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சிபிஐ போன்ற புலனாய்வு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 3வது அணித் தலைவர்கள், "மாயாவதியுடன் இணைந்து 3வது அணியை பலப்படுத்துவோம்" என்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கட்சி மாறி வாக்களித்த எம்.பி.க்கள் நீக்கம் : பா.ஜ. முடிவு
பார்லி.யில் பணக்கட்டு: பா.ஜ.வுக்கு சமாஜ்வாதி நோட்டீஸ்
பதவி விலக மறுப்பு : சோம்நாத் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் ?
கட்சி மாறி ஒட்டுப்போட்ட பிஜு ஜனதா தள எம்.பி. நீக்கம்
காஷ்மீரில் சாலை விபத்தில் 15 பேர் பலி
புது‌வை ஆளுனராக கோவிந்த்சிங் பதவி ஏற்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...