|
| பார்லி.யில் பணக்கட்டு: பா.ஜ.வுக்கு சமாஜ்வாதி நோட்டீஸ் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 23 ஜூலை 2008 ( 15:49 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் இருக்க பணம் தந்ததாக கூறி நாடாளுமன்றத்தில் பணக்கட்டுகளை கொட்டி பரபரப்பு ஏற்படுத்திய பாரதிய ஜனதா எம்.பி.க்களுக்கு உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அனுப்ப சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது.
நம்பிக்கை தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நேற்று 2வது நாள் விவாதம் நடைபெற்றது.
அப்போது பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த அசோக் அர்கால், பாகன் சிங் மற்றும் மகாவீர் பகோதா ஆகியோர் திடீரென நாடாளுமன்றத்தின் மையப்பகுதிக்கு ரூபாய் நோட்டுக்களை கொண்டுவந்து கொட்டினர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் கலந்துகொள்ளாமல் இருப்பதற்காக சமாஜ்வாடி கட்சி தரப்பில் ரூ.1 கோடி முன்பணமாக தரப்பட்டதாக குற்றம் சாட்டி, பணக்கட்டுகளை எடுத்துக்காட்டினர்.
இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, அசோக் அர்கால், பாகன் சிங் மற்றும் மகாவீர் பகோதா ஆகிய இந்த 3 எம்.பிக்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அனுப்ப சமாஜ்வாதி கட்சி முடிவு செய்திருப்பதாக அக்கட்சித் தலைவர் மோகன் சிங் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|