|
| கட்சி மாறி ஒட்டுப்போட்ட பிஜு ஜனதா தள எம்.பி. நீக்கம் |
| புவனேஸ்வர்(ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 12:56 IST ) | |
நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கின்போது கட்சி மாறி வாக்களித்த பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி. ஹரிகர் ஸ்வயின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக 13 எம்.பி. க்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.
அதன்படி, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 7 பேர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 2 பேர், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் என இந்த 13 எம்பிக்களும் கட்சி மாறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.இதனால் மன்ம்கன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கட்சி மாறி வாக்களித்த பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி. ஹரிகர் ஸ்வயின் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அக்கட்சித் தலைவரும், ஒரிஸா முதலமைச்சருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
இதனிடையே தமது 'உள் குரல்' காரணமாக தாம் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஹரிகர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|