|
| எதிர்கால திட்டம்: கம்யூ., பகுஜன், ஐ.தே.மு.கூ இன்று ஆலோசனை |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 11:48 IST ) | |
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் தோல்வியுற்ற நிலையில், இடதுசாரிகளின் தலைவர்கள், பகுஜன் சமாஜ்வாதி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் ஒன்றாக கூடி தங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதியின் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில், இடதுசாரிகள் தலைவர்கள் பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஏ.பி.பரதன், டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவ கவுடா, ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலாளர் ஜி.தேவராஜன், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், தங்களது அடுத்தக் கட்ட செயல் திட்டங்கள் குறித்து இடதுசாரிகள், பகுஜன் சமாஜ்வாதி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்யவுள்ளனர்.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்பதால், இன்றையக் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ள கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், தேவ கவுடாவின் மகனுமான ஹெச்.டி.குமாரசாமி, கர்நாடகாவில் முன்றாவது அணியை வலுப்படுத்த தாங்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|