யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கொ‌த்தடிமை போல் நான் செயல்பட விரும்பினர்: ‌பிரதம‌ர்
புதுடெல்லி (ஏஜென்சி), 23 ஜூலை 2008   ( 10:10 IST )
"அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விஷய‌த்‌தி‌‌ல் இடதுசாரிகள் நான் ஒரு கொத்தடிமை போல் செயல்பட வேண்டும் என்று விரும்பினர்" எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியிலிருந்து கவிழாமல் தப்பியது.

முன்னதாக, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்றது.

மாலை 4 மணியளவில், சமாஜ்வாதி கட்சியினர் தங்களுக்கு ரூ.9 கோடி தர பேரம் பேசியதாக கூறி பாரதிய ஜனதா எம்.பிக்கள் பணக்கட்டுக்களை காட்டி பரபரப்பை ஏற்படுத்தியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் கூடியது.

அப்போது, பிரதமர் மன்மோகன் சிங் விவாதத்திற்கு பதிலளித்துப் பேச முயன்றார். ஆனால், பாரதிய.ஜனதாவினரின் அமளி காரணமாக அவரது விளக்கவுரை அவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதை பிரதமர் படித்ததாக அறிவிக்கப்பட்டது.

அதில் மன்மோகன் சிங் கூறியிருந்ததாவது:

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப் படு‌த்துவத‌ற்காக நா‌ங்க‌ள் மே‌ற்கொ‌ள்ளு‌ம் பே‌ச்சு‌க்க‌ளி‌ன் ஒ‌வ்வொரு க‌ட்ட‌த்‌திலு‌ம் த‌ங்க‌ளி‌ன் ஒ‌ப்புதலை‌ப் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று இடதுசா‌ரிக‌ள் ‌விரு‌ம்‌பின‌ர். எ‌ன்னை அவ‌ர்க‌ளி‌ன் கொ‌த்தடிமையை‌ப் போல‌ செய‌ல்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்‌பின‌ர்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் ப‌ற்‌றி குறை‌ந்தப‌ட்ச‌ப் பொது‌ச் செய‌ல்‌தி‌ட்ட‌த்‌தி‌‌ல் கு‌றி‌ப்‌பிட‌ப்படாம‌ல் இரு‌க்கலா‌ம்.

இரு‌ந்தாலு‌ம், நமது சுத‌ந்‌திரமான வெளியுறவுக் கொ‌ள்கைகளை‌த் ‌தியாக‌ம் செ‌ய்யாம‌ல் அமெ‌ரி‌க்காவுட‌ன் நெரு‌ங்‌கிய உறவுகளை மே‌ம்படு‌த்‌தி‌க்கொ‌ள்ளலா‌ம் எ‌ன்று கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பாரதிய ஜனதா‌வி‌ன் மூ‌த்த தலைவர் அ‌த்வா‌னி‌ எ‌ன்‌ ‌மீது ப‌ல்வேறு கு‌ற்ற‌ச்சாட்டு‌க்களை‌க் கூ‌றியு‌ள்ளா‌ர். அவை எ‌ல்லாவ‌ற்று‌க்கு‌ம் ப‌தில‌ளி‌த்து அவை‌‌யி‌ன் நேர‌த்தை ‌வீணடி‌க்க நா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.

அதே நேர‌‌த்‌தி‌ல் அ‌த்வா‌னி தனது கரு‌த்து‌க்க‌ள் ‌சிலவ‌ற்றை சுயப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம். இவ்வாறு மன்மோகன் சிங் அந்த உரையில் கூறியிருந்தார்.

அரசு கவன‌ம் செலு‌த்‌தி வரும் மிக முக்கியமான 9 திட்டங்களையும் அந்த உரையில் மன்மோகன் சிங் பட்டியலிட்டிருந்தார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வாக்கெடுப்பில் வெற்றி: மகிழ்ச்சி வெள்ளத்தில் மன்மோகன் சிங்!
அரசு வெற்றி: கட்சி மாறி ஓட்டு போட்ட 13 எம்பிக்கள்!
மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
வறுமையை ஒழிக்க அணுசக்தி தேவை : ராகுல்
'சமநிலை :சபாநாயகர் அரசுக்கு ஓட்டளிக்க வேண்டும்!'
குதிரை பேரம் : நாடாளுமன்றத்தில் கொட்டப்பட்ட பணக்கட்டு !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...