|
| வாக்கெடுப்பில் வெற்றி: மகிழ்ச்சி வெள்ளத்தில் மன்மோகன் சிங்! |
| புதுடெல்லி (ஏஜென்சி), 23 ஜூலை 2008 ( 09:50 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
இந்திய பிரதமர்களில் எதிர்கட்சிகள் மற்றும் இடதுசாரிகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டவர் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தியப் பிரதமர்களில் மிகவும் பலவீனமானவர் என்ற விமர்சனம் மன்மோகன் சிங்கை மிகவும் காயப்படுத்தியது. நம்பிக்கை தீர்மானத்தை நேற்று முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்து பேசியபோது, "விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவரும் இந்த தருணத்தில், எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது" என்று வேதனையுடன் அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் கடந்த இரு தினங்களாக பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சியினர் மன்மோகன் சிங்கையும், அவரது தலைமயிலான மத்திய அரசையும் கடுமையாக விமர்ச்சித்து பேசிய பேச்சுக்களை மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் மன்மோகன் சிங். இந்த சூழ்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தப்பி பிழைக்குமா என்ற பலத்த சந்தேகங்களுக்கு மத்தியில், 19 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றது பிரதமர் மன்மோகன் சிங்கே எதிர்பார்க்காத ஒன்று எனலாம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் மிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது, இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த காங்கிரஸ் தலைவர் சோனியா, கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது அரசு வெற்றிப் பெற்றதை தெரிவித்தார்.
இந்தியாவின் 30 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்ற 7வது பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத் தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|