|
| அரசு வெற்றி: கட்சி மாறி ஓட்டு போட்ட 13 எம்பிக்கள்! |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 09:23 IST ) | |
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா உள்பட 13 எம்பிக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் மத்திய அரசு அமோக வெற்றி பெற்றது.
மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில், வாக்கெடுப்புக்கு முந்தைய நிமிடம் வரை யாருக்கு வெற்றி என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்தது. இதனால் எம்பிக்கள் பதற்றத்துடனும், தலைவர்கள் பரபரப்புடனும் காணப்பட்டனர்.
இந்த சூழ்நிலையில், நடந்து முடிந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. இதனால் மொத்தம் 19 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு அமோக வெற்றிப் பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் முக்கியத் திருப்பமாக, 13 எம்பிக்கள் கட்சி மாறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதன்படி, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 7 பேர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 2 பேர், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர் என இந்த 13 எம்பிக்களும் கட்சி மாறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதுதவிர, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 எம்பிக்கள், சிவசேனாவை சேர்ந்த ஒரு எம்பி ஆகியோர் உள்பட 8 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதன் காரணமாக, எதிர்பார்த்ததை விடவும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அரசு அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது.
மதிமுகவை சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் எல்.கணேசன் ஆகியோரும் கட்சியை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|