|
| மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி |
| புதுடெல்லி (ஏஜென்சி), 22 ஜூலை 2008 ( 20:37 IST ) | |
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியிலிருந்து கவிழாமல் தப்பியது.
அணுசக்தி ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தமது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கொண்டு வந்தார்.
அத்தீர்மானத்தின் மீது இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்ற நிலையில், மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக சமாஜ்வாதி கட்சி தங்களுக்கு 9 கோடி ரூபாய் அளிக்க முன்வந்ததாக கூறி பா.ஜனதா எம்.பிக்கள் மூன்று பேர் அவையில் பணக்கட்டுக்களை தூக்கி காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டு, இப்பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இதனைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.
பின்னர் அவை மீண்டும் கூடியது.தொடர்ந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் விவாதத்திற்கு பதிலளித்துப் பேச முயன்றபோது, பா.ஜனதாவின் அமளியால் இயலாமல் போனது. இதனால் அவரது பதிலுரை அவையில் தாக்கல் செய்யப்பட்டு, உரையை பிரதமர் படித்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
275 வாக்குகள் ஆதரவுடன் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். எதிராக 256 வாக்குகள் பதிவாகியது. 2 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|