யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
வறுமையை ஒழிக்க அணுசக்தி தேவை : ராகுல்
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008   ( 19:12 IST )
நாட்டின் வறுமைக்கும் மின்சார உற்பத்திக்கும் நேரடியான தொடர்புண்டு என்றும், வறுமையை ஒழிப்பதற்கான மின் உற்பத்திக்கு ணுசக்தி அவசியம் தேவையென்றும் ராகுல் காந்தி கூறினார்.

மக்களவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. யும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி பேசியதாவது :

நான் எந்தக் கட்சியின் எம்.பி. யாகவும் பேச விரும்பவில்லை.ஒரு இந்தியனாகவே பேச விரும்புகிறேன்.என்னைப் போலவே இங்கிருக்கும் அனைத்து எம்.பி.க்களுக்குமே நாட்டின் நலனை மனதில் வைத்துத் தான் பேசுகிறார்கள் எனக் கருதுகிறேன்.

மின்சாரத்திற்கும், மக்களின் வறுமைக்கும் நேரடியான தொடர்புண்டு. 3 நாட்களுக்கு முன் விதர்பாவில் உள்ள சசிகலா என்ற ஒரு ஏழைப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றேன்.

அந்த வீடு ஒரு நாளைக்கு வெறும் ரூ. 60ல் வயிற்றைக் கழுவி வருகிறது. அந்தப் பெண்ணின் மூத்த மகனுக்கு கலெக்டராக வேண்டும் என்று கனவு, இரண்டாவது மகனுக்கும் படிக்கும் கனவிருக்கிறது.

ஆனால், அவர்களது வீட்டில் விளக்கே இல்லை. அந்தக் குடும்பம் வறுமையிலிருந்து மீள ஒரே வழி அவர்களின் மகன்களுக்கு கல்வி கிடைப்பது தான். அதற்கு ஒரே வழி வீட்டுக்கு மின் விளக்கு கிடைப்பது.

இது போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய ஒரே வழி நம் மின்சார உற்பத்தியை அதிகரிப்பது தான்.

அதே விதர்பா பகுதியில் கலாவதி என்ற பெண்.. அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அவருக்கு 9 குழந்தைகள். இப்போது இரு எருமை மாடுகளை வளர்த்து பால் விற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்...

இந்த அணு ஒப்பந்தம் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, கலாவதி போன்றவர்களுக்கும் ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி போல இருந்து பாதுகாத்து உதவப் போகிறது.

நம் நாட்டின் நீண்டகால மின்சார பற்றாக்குறைக்குத் தீர்வு இந்த ஒப்பந்தம். பிரச்சனையையும் தீர்வையும் முழுமையாகப் புரிந்து வைத்ததால் தான் பிரதமர் இந்த ஒப்பந்தத்துக்கு முன் வந்தார்.

சாப்ட்வேர் துறையிலும், தொலைத் தொடர்பிலும் நாம் இன்று மாபெரும் சாதனை படைத்துள்ளோம். இந்தியா இப்படி ஒரு வளர்ச்சியை எட்டும் என 10 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலானவர்கள் நம்பவில்லை. ஆனால், அதை சாதித்துக் காட்டினோம்.

அதே போலத்தான் இந்த அணு மின்சாரமும். நம்புங்கள்.. இது நம் நாட்டை பெரும் வளர்ச்சிக்கு இட்டு்ச் செல்லப் போகிறது.

பெட்ரோலியம் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களை முழுமையாகச் சார்ந்து நாம் இனியும் காலம் தள்ள முடியாது.

இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளாலாம்.. ஆனால், எப்படி ஆளப் போகிறோம் என்பது தான் முக்கியம். கண்ணுக்குத் தெரியாத எதற்கோ பயந்து கொண்டு நாம் ஓட முடியாது. பயம் நம்மை இயக்கக் கூடாது.

மக்கள் மீது நம்பிக்கை வைத்து பிரதமர் இந்த ஒப்பந்தத்தை கையில் எடுத்துள்ளார். அவருக்கு துணை நிற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'சமநிலை :சபாநாயகர் அரசுக்கு ஓட்டளிக்க வேண்டும்!'
குதிரை பேரம் : நாடாளுமன்றத்தில் கொட்டப்பட்ட பணக்கட்டு !
ராகுல் பேச்சில் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் இடையூறு
வாஜ்பாய் உள்ளிட்ட 6 எம்.பி.க்களுக்கு விடுப்பு அனுமதி
வளர்ச்சியை தடுக்கும் இடதுசாரிகள்: ப.சி. காட்டம்
ராஜினாமாவை வெளியில் அறிவிக்க மாட்டேன் : சோம்நாத்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...