|
| அணு ஆயுதம் தயாரிக்க முடியும் : அத்வானிக்கு பிரணாப் பதில் |
| திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 18:26 IST ) | |
அணு ஆயுதத் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை அரசு திறந்தே வைத்திருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் அத்வானி, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் அணு ஆயுதம் தயாரிக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவை, அமெரிக்காவின் அடிமையாக ஆக்கிவிடும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி, அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஏன் விரும்புகிறது என்பதை சில வரலாற்று குறிப்புகள் மூலம் விளக்கினார்.
நமது நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அணு திட்டங்களை ஆதரிக்கவில்லை என்று பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி கூறியது உண்மையல்ல என்ற பிரணாப் முகர்ஜி, அத்வானியை நோக்கி, "நீங்கள் பேசும் ஆர்வத்தில் மொரார்ஜி தேசாயும் ஜவஹர்லால் நேருவும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டனர் என்று குறிப்பிட்டீர்கள். ஜவஹர்லால் நேரு 1964 இல் இறந்து விட்டார். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1970 இல்தான் கொண்டு வரப்பட்டது. இறந்த மனிதர் எப்படி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ நிராகரிக்கவோ முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.
பொக்ரான் அணு ஆயுதச் சோதனைக்கு அடித்தளமிடும் நடவடிக்கைகளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்திதான் முதன்முதலில் மேற்கொண்டார். "அணு ஆயுதமயமாக்கலை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்காக எங்கள் நலனைக் கருத்தில்கொண்டு அணு ஆயுதத் தயாரிப்பு கொள்கைகளை கைவிட மாட்டோம்" என்று ராஜீவ் காந்தியும் பன்னாட்டு அளவில் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார் என்றார் பிரணாப்.
அணு ஆயுதங்கள் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு பல ஆண்டுகளாக மாறாமல் உள்ளது என்று குறிப்பிட்ட பிரணாப், "அணு ஆயுதம் என்பது போரில் வெற்றிபெறுவதற்கான ஆயுதமல்ல என்று நாங்கள் உணர்ந்துள்ளோம். அது பேரழிவை மட்டுமே விளைவிக்கும்... இருந்தாலும் அணு ஆயுதத் தயாரிப்பு வாய்ப்புகளை திறந்தே வைத்திருப்போம்" என்றார்.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் நமது வெளியுறவுக் கொள்கைகளை பாதிக்காது என்று கூறிய பிரணாப், ஒரு அரசியல்வாதியாகத் தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அயலுறவுக் கொள்கை சார்ந்த எந்த விடயமும் இதுபோல விவாதிக்கப்பட்டது இல்லை என்றார்.
அணு சக்தி ஒப்பந்தத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி மத்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|