யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மன்மோகன் சிங் ஒரு 'வியாபாரி' : இடது
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008   ( 18:11 IST )
பிரதமர் மன்மோகன் சிங் ஒரு ( லீடர்) தலைவரல்ல ; அவர் ஒரு ( டீலர் ) வியாபாரி என்று மக்களவையில் இடதுசாரி உறுப்பினர் முகமத் சலீம் குற்றம் சாட்டினார்.

மக்களவையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முகமத் சலீம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இடதுசாரிகளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக சாடினார்.

ஒரு வியாபாரி வியாபாரத்தை மட்டுமே பார்ப்பார்; அதே சமயம் ஒரு தலைவர் ஒரு பேரத்தில் (ஒப்பந்தம்) ஈடுபட்டால் அதன் வரலாறு என்ன?..., அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால சிக்கல்கள் மற்றும் இதர விளைவுகளைப் பற்றி யோசிப்பார்.

அணுசக்தி ஒப்பந்தம் என்பது இரு நபர்களுக்கு இடையே அல்லாமல் இரு நாடுகளுக்கு இடையே இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

தேசபக்தி சான்றிதழ் அளிப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு நாங்கள் ஆதரவளிக்கவில்லை.குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில்தான் நாங்கள் அரசுக்கு ஆதரவளித்தோம். ஆனால் குறைந்தபட்ச செயல் திட்டத்தை அரசு பின்பற்றவில்லை.

அணுசக்தி ஒப்பந்தமும், அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதும் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் இடம்பெறவில்லை என அவர் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியா - பாக். பேச்சுவார்த்தை துவங்கியது
'பொக்ரான்'சோதனையை எதிர்க்கவில்லை : மன்மோகன்
ஐசியூவில் ஐ.மு.கூட்டணி : அத்வானி விளாசல்
எனது முடிவு ஒவ்வொன்றும் தேச நலனுக்கானது : மன்மோகன்
மக்களவையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்தார் பிரதமர்
அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் : பிரதமர் நம்பிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...