|
| இந்தியா - பாக். பேச்சுவார்த்தை துவங்கியது |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 17:08 IST ) | |
இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் மட்டத்திலான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் தொடங்கியது.
தீவிரவாதம், காஷ்மீர் மற்றும் பல்வேறு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், விசாக் கொள்கிஅயில் தளர்வு, பரஸ்பரம் சிறைக் கைதிகளை விடுவிப்பது மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக ஊடுருவல் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல்கள் அதிகரித்து வருவதை இந்த பேச்சுவார்த்தையின்போது சுட்டிக்காட்டி, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் அண்மையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது.இந்த பிரச்சனை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|