யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஐசியூ நோயாளியாக ஐ.மு.கூ. அரசு : அத்வானி விளாசல்
புதுடெல்லி (ஏஜென்சி), 21 ஜூலை 2008   ( 14:05 IST )
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) இருக்கும் நோயாளிப் போன்று ஆகிவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் ல்.கே. அத்வானி கூறினார்.

மக்களவையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை துவக்கி வைத்துப் பேசுகையில் மேற்கண்டவாறு கூறிய அத்வானி,"அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவின் அடிமையாகவும், இளைய கூட்டாளியாகவும் இந்தியாவை ஆக்குவதற்கான இரு தனிநபர்களுக்கிடையேயான ஒப்பந்தம் " என்று கடுமையாக சாடினார்.

"காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அனுமதியில்லாமல் உங்களால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது " என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை நோக்கி கடுமையாக தாக்கிப் பேசினார் அத்வானி.

" நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக தற்போது மக்களவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளதற்கா தயவு செய்து வேறு யாரையும் குற்றம் சுமத்தாதீர்கள். மைனாரிட்டி அரசாக ஆகி விட்ட அரசை ஆட்சியில் தொடர அனுமதித்தது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.அதற்கு யாரையாவது குற்றம் சாட்ட வேண்டுமென்றால் அதற்கு உங்களது அரசைதான் குற்றம்சாட்ட வேண்டும் " என்றும் அத்வானி ஆவேசமாக பேசினார்.

" நாங்கள் அரசை தோற்கடிக்கத்தான் விரும்புகிறோமே தவிர அழிக்க விரும்பவில்லை " என குறிப்பிட்ட அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரையும் உதாரணமாக சுட்டிக் காட்டினார்.

தற்போதுள்ள அரசு முடங்கிப்போய் இருப்பதைப்போன்று இதற்கு முன்னர் வேறு எந்த அரசையும் தாம் கண்டதில்லை.

இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்ட உடனேயே, பெரும்பான்மை பலத்தை இழந்த மைனாரிட்டி அரசாக ஆகிவிட்டது என்றும் அத்வானி மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணு ஆயுத‌ம் தயா‌ரி‌‌க்க முடியும் : அத்வானிக்கு பிரணாப் பதில்
மன்மோகன் சிங் ஒரு 'வியாபாரி' : இடது
இந்தியா - பாக். பேச்சுவார்த்தை துவங்கியது
'பொக்ரான்'சோதனையை எதிர்க்கவில்லை : மன்மோகன்
எனது முடிவு ஒவ்வொன்றும் தேச நலனுக்கானது : மன்மோகன்
மக்களவையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்தார் பிரதமர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...