யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அணுசக்தி ஒப்பந்தம் தேச நலனுக்கானது : மன்மோகன்
புதுடெல்லி (ஏஜென்சி), 21 ஜூலை 2008   ( 13:01 IST )
தாம் பிரதமராக பதவியேற்றதிலிருந்து மேற்கொண்ட முடிவுகள் ஒவ்வொன்றும் தேச நலனை அடிப்படையாக கொண்டது என்று மக்களவையில் இன்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தமும் அவ்வாறானதே என்றார்.

மக்களவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் தொடங்கியது.

இக்கூட்டம் தொடங்கியதும், 7 புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பின், கடந்த கூட்டத் தொடருக்குப் பின்னர் மறைந்த 5 முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, `அமைச்சரவையின் மீது இந்த அவை நம்பிக்கை தெரிவிக்கிறது' என்ற ஒற்றை வரியைக் கொண்ட நம்பிக்கைத் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்து, அதன் மீதான விவாதத்தையும் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது தாம், பிரதமராக பதவியேற்றதிலிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்துமே தேச நலனுக்கானது என்றார்.

பணவீக்கம் மற்றும் விலைவாசி பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொண்டிருக்கும் தருணத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது வருத்தமளிப்பதாக மன்மோகன் கூறினார்.

அதே சமயம் தமது அரசு இன்று நான்காண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்துள்ளது என்றால் அதற்கான பெருமை சோனியா காந்தி மற்றும் கருணாநிதி உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும், , ஜோதிபாசு,ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போன்ற இடதுசாரி தலைவர்களுக்கும்தான் சாரும்.அவர்களது தொலைநோக்குப் பார்வை மற்றும் விவேகம் ஆகியவையே காரணம் என மன்மோகன் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிடம் காங்கிரஸ் கட்சி தேசத்தை விற்றுவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய மன்மோகன், காங்கிரஸ் கட்சிதான் மாபெரும் தேச பக்தி கொண்ட கட்சி என்பதில் தாம் தெளிவாக இருப்பதாக கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணு ஆயுத‌ம் தயா‌ரி‌‌க்க முடியும் : அத்வானிக்கு பிரணாப் பதில்
மன்மோகன் சிங் ஒரு 'வியாபாரி' : இடது
இந்தியா - பாக். பேச்சுவார்த்தை துவங்கியது
'பொக்ரான்'சோதனையை எதிர்க்கவில்லை : மன்மோகன்
ஐசியூ நோயாளியாக ஐ.மு.கூ. அரசு : அத்வானி விளாசல்
மக்களவையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்தார் பிரதமர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...