|
| மக்களவையில் நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்தார் பிரதமர் |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 11:36 IST ) | |
நாடாளுமன்ற இரண்டு நாள் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்தார்.
மக்களவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் தொடங்கியது.
இக்கூட்டம் தொடங்கியதும், 7 புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன்பின், கடந்த கூட்டத் தொடருக்குப் பின்னர் மறைந்த 5 முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, `அமைச்சரவையின் மீது இந்த அவை நம்பிக்கை தெரிவிக்கிறது' என்ற ஒற்றை வரியைக் கொண்ட நம்பிக்கைத் தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தாக்கல் செய்து, அதன் மீதான விவாதத்தையும் தொடங்கி வைத்துப் பேசினார்.
முன்னதாக, இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, கூட்டம் அமைதியாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு கோரினார். ௦
இன்றைய விவாதத்தின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோரும் விவாதத்தின் பங்கேற்கின்றனர்.
மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, லாலு பிரசாத் யாதவ், ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்டோர் அரசு சார்பில் களமிறங்குகின்றனர்.
இதில், இடதுசாரிகள் உறுப்பினர்களும், பாஜக தலைவர்களும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்களும் பங்கேற்று, மத்திய அரசையும், அணுசக்தி ஒப்பந்தத்தையும் சாடி பேசுகின்றனர்.
இன்றும் நாளையும் சேர்த்து மொத்தம் 16 மணி நேரம், நடத்தப்படவுள்ள விவாதத்தின் முடிவில் நாளை மாலை நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.
அப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெறுமா? அல்லது தோற்கடிக்கப்படுமா என்பது தெரியவரும்.
மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 545. இவற்றில் 2 இடங்கள் காலியாக உள்ளன; ஓர் உறுப்பினருக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் ஆதரவு வாக்குகளும், எதிர்ப்பு வாக்குகளும் சமமாக இருந்தால் மட்டுமே, சபாநாயகர் வாக்களிக்க முடியும். எனவே, வாக்குரிமையுள்ள மக்களவை 541 உறுப்பினர்களில், குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெற அரசுக்கு 271 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|