யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் : பிரதமர் நம்பிக்கை
புதுடெல்லி (ஏஜென்சி), 21 ஜூலை 2008   ( 10:43 IST )
நாடாளுமன்ற இரண்டு நாள் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மக்களவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்தார்.

அவைக்குச் செல்வதற்கு முன்னதாக வெளியே இருந்தபடி, அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெறுவது உறுதி எனும் விதமாக, ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் ஒருங்கே தூக்கிபடி அவர் கையசைத்தார்.

மக்களவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் தொடங்கியது.

`அமைச்சரவையின் மீது இந்த அவை நம்பிக்கை தெரிவிக்கிறது' என்ற ஒற்றை வரியைக் கொண்ட நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்யும் பிரதமர், அதன் மீதான விவாதத்தையும் தொடங்கி வைத்துப் பேசுவார்.

இன்றும் நாளையும் சேர்த்து மொத்தம் 16 மணி நேரம், நடத்தப்படவுள்ள விவாதத்தின் முடிவில் நாளை மாலை நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மக்களவையில் இன்று நம்பிக்கை தீர்மானம் தாக்கல்
எம்பிக்களுக்கு சோனியா, அத்வானி இன்று விருந்து!
ஜம்மு: ராணுவ தளபதி சுட்டுக்கொலை
அனைத்துக் கட்சிகளுடன் சோம்நாத் நாளை ஆலோசனை
பிரதமராகிறார் மாயாவதி: இன்று ஆலோசனை
ஆதாயம் காங்.கிற்கு... பின்னடைவு சமாஜ்வாதிக்கு !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...